மணப்பெண் கோலத்தில் விஜய் டிவி டிடி: மீண்டும் திருமணமா?

மணப்பெண் கோலத்தில் விஜய்டிவி டிடி இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் டிடி அருகே மாப்பிள்ளை கோலத்தில் மலையாள நடிகர் ஒருவர் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறும்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொகுப்பாளினி, நடிகையாக இருந்த டிடி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற பாடலை அவர் ரீமேக் செய்துள்ளார். அந்த பாடலுக்கு அவரும் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணா என்பவரும் நடித்துள்ளனர்
மணமகள், மணகன் கோலத்தில் டிடி மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவரும் இருக்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் இந்த பாடலை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மணமகள் வேடத்தில் இருக்கும் டிடியின் கோலத்தை பார்த்த ஒருசிலர் இந்த பாடலை பார்க்காமல் வெறும் புகைப்படங்களை மட்டும் சமூகவலைதளத்தில் பார்த்து டிடிக்கு மீண்டும் திருமணமா என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது