ரீ எண்டரி கொடுத்த விஜய் டிவி பிரபலம்

தற்போது காற்றின் மொழி சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் பிரபல விஜய் டிவி நட்சத்திரமான விக்ரம் ஶ்ரீ இணைந்து நடிக்கிறார். 
 

விஜய் டிவியின் நட்சத்திர நடிகர் தற்போது ஒரு சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் காற்றின் மொழி. இத்தொடரில் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரியங்கா ஜெயின் கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்நிலையில் தற்போது காற்றின் மொழி சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் பிரபல விஜய் டிவி நட்சத்திரமான விக்ரம் ஶ்ரீ இணைந்து நடிக்கிறார். 

சிவா மனசுல சக்தி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரம் ஶ்ரீ. தற்போது காற்றின் மொழி தொடர் மூலம் இவர் ரீ என்ட்ரி கொடுப்பது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web