விஜய் கையில் எடுத்த ‘ஒத்த செருப்பு’: பார்த்திபனின் டுவீட்

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தளபதி விஜய் சற்று முன்னர் நேரில் அஞ்சலி செலுத்தினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் திரும்பிக் கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவரின் காலனி கீழே கிடந்ததை பார்த்து அதை எடுத்து கையில் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது 

எஸ்பிபி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் அவரை பார்க்க தள்ளுமுள்ளு செய்தனர். அப்போது ரசிகர் ஒருவரின் காலனி கீழே இருந்ததை பார்த்த விஜய் அதை கையில் எடுத்து அந்த ரசிகர் இடம் கொடுத்தார் இதனால் அந்த ரசிகர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் 

இந்த இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவரின் ஒத்த செருப்புக்கு கிடைத்த கெளரவம் என்ற டுவிட்டுக்கு நடிகர் இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்

நான் அந்த படத்திற்கு டைட்டில் வைக்கும் போது இப்படியெல்லாம் நடக்கும் என்று யோசிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web