பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்-சூர்யா பட நடிகை

 

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகை அபிநயஸ்ரீ கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது விஜய் மற்றும் சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ என்ற படத்தில் அபிராமி என்ற கேரக்டரில் அபிநயஸ்ரீ நடித்து இருப்பார் என்பதும் இவர் பிரபல கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இருப்பினும் இந்த அபிநயஸ்ரீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்படவில்லை என்பதும் விரைவில் இது உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் லட்சுமிமேனன் ஷிவானி நாராயணன் பாடகர் வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, ரேகா ஆகியோர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

From around the web