திடீரென நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்!
திடீரென்று அவரின் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்திக்க கூட்டத்தை கூட்டியுள்ளார்.
Sat, 6 Feb 2021

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
மேலும் இப்படம் தற்போது வரையில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பனையூரில் திடீரென்று அவரின் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்திக்க கூட்டத்தை கூட்டியுள்ளார்.
மேலும் இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரபரப்பாக வெளியாகி வருகிறது.
படைபலம் 😎🔥💪#Master #VMIMeeting @actorvijay pic.twitter.com/dHN3Pligbw
— Nellai District Online VMI (@NellaiOnlineVMI) February 6, 2021