விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்: இணையத்தில் வைரல்

 
விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்: இணையத்தில் வைரல்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இருப்பினும் விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் யுவன்சங்கர் ராஜா தீவிர முயற்சி எடுத்து வருகிறார் 

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளையராஜா பாடிய இந்த பாடல் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த பாடலை பாடலாசிரியர் பா விஜய் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

maamanithan

விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடலை பாடிய இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web