ஒரு மணி நேர வெப் படத்தில் விஜய்சேதுபதி மகள்: பெண் இசையமைப்பாளர் அறிமுகம்

 

 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய் சேதுபதியும் தற்போது ஒடிடிக்காக ஒரு வெப் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். 

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா நடிக்கவுள்ளார். மேலும் இந்த வெப் திரைப்படத்தில் ரெஜினா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ‘முகிழ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

vijaysethupathi daughter

இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாகவும் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் மட்டுமே உள்ள இந்த வெப் திரைப்படம் வரும் மார்ச் மாதம் முன்னணி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என்றும் சீரியசான கதையம்சம் கொண்ட இந்த படம் பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது 

விஜய் சேதுபதியின் முதல் தயாரிப்பான இந்த வெப்படம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web