பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய விஜய் சேதுபதி பட நடிகை!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென இன்னொரு போட்டியாளராக இருந்த நடிகை காயத்ரியும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது 

விஜய் சேதுபதி நடித்த ஒருசில படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட தாகவும் கூறப்பட்டது

ஆனால் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் பிக்பாஸ் வீட்டிற்கு தான் போக போவதில்லை என்றும் உங்களை போலவே நானும் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே நிகழ்ச்சியை பார்த்து ரசிக்க போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் என்னை வைத்து படம் தயாரிக்க விருப்பமுள்ளவர்கள் தன்னை அணுகலாம் என்றும் அவர் அதில் கூறியுள்ளார் இதனை அடுத்து காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது

ஏற்கனவே நடிகை கிரண், அமிர்தா ஐயர், லட்சுமி மேனன் உள்பட பல நடிகைகள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது காயத்ரியும் விலகி உள்ளது அந்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது

From around the web