கத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tue, 12 Jan 2021

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான க.பெ.ரணசிங்கம் திரைப்படம் மிக சிறந்த விமர்சனகளை பெற்றது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு இவர் வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், நாளை பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக அந்ததுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.
மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.