நேரில் அஞ்சலி செலுத்தி நிதியுதவியும் செய்த விஜய்சேதுபதி: வடிவேல் பாலாஜி குடும்பத்தினர் நெகிழ்ச்சி

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேல் பாலாஜிக்கு அந்த மருத்துவமனை சரியாக சிகிச்சை அளிக்கவில்லை
 

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேல் பாலாஜிக்கு அந்த மருத்துவமனை சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் அவருடைய உறவினர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர் 

இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று நடைபெற இருக்கும் நிலையில் அவருக்கு ஏராளமான திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள நடிகர் வடிவேல் பாலாஜியின் வீட்டிற்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமின்றி வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிதி உதவியும் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

விஜய் சேதுபதியின் இந்த உதவியை பார்த்து வடிவேல் பாலாஜி குடும்பத்தினர் நெகழ்ச்சி அடைந்து அவருக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயனும் ஒரு பெரிய தொகையை வடிவேல் பாலாஜிக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web