சேரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குனர் சேரன் தான் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளார். பிக்பாஸ் மூன்றாவது சீசன் 70வது நாளைக் கடந்து முக்கியமான கட்டத்தை நெருங்கி கொண்டு இருகிறது. சேரன், வனிதா, ஷெரின், தர்ஷன், முகென், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகிய 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது. சேரனிடம் கேள்வி வந்தபோது
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குனர் சேரன் தான் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளார். பிக்பாஸ் மூன்றாவது சீசன் 70வது நாளைக் கடந்து முக்கியமான கட்டத்தை நெருங்கி கொண்டு இருகிறது.

சேரன், வனிதா, ஷெரின், தர்ஷன், முகென், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகிய 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

சேரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதி

சேரனிடம் கேள்வி வந்தபோது பிக்பாஸ்க்கு பின் திரைத்துறையில் உங்கள் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும் என கேட்டார். அப்போது அந்த கேள்வியை ரசித்த கமல்ஹாசன் இது கேள்வியல்ல வாழ்த்து என தனது பாணியில் சொல்லி சிரித்தார். அதற்கு பதில்ளித்த சேரன் நிச்சயம் எனது கம்பேக் ஒரு ஸ்ட்ராங்கான கம்பேக் ஆகத்தான் இருக்கும்.

அதற்கான பேச்சுவார்த்தை முடித்துவிட்டுதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தேன். விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தை நான் இயக்க போறேன். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. உங்கள் நம்பிக்கையே காப்பாற்றுவேன். என்று கூறினார் சேரன்.

ஆகஸ்ட் 2ம்தேதி சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதற்காக நுழைந்தேன் என்ற காரணத்தை கூறும்போது விஜய் சேதுபதி மூலமாகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தெரியும். அவரால் தான் உள்ளேயே நுழைந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறைகளின் மனநிலையை நான் முயற்சித்து வருகிறேன் என கூறியிருந்தார்.

From around the web