விஜய்சேதுபதி-டாப்சி படப்பிடிப்பு: செல்பி எடுத்த ராதிகா

 

பிரபல இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கிவரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் டாப்ஸி நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஒன்றில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் 

இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் அரண்மனையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடப்பதாகவும் படப்பிடிப்பின் இடையே விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர்களுடன் செல்பி எடுத்ததாகவும் நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை கூட விடாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்

From around the web