சண்முகபாண்டியனின் அடுத்த படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்!

 

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஏற்கனவே இரண்டு படங்கள் நடித்துள்ளார் என்பதும் அதில் ஒரு படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஜய் சேதுபதி படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் ஒருவர் சண்முகபாண்டியனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உருவான ’மாமனிதன் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சண்முகபாண்டியனுக்கு ஏற்ற கதையை தயார் செய்து சண்முக பாண்டியனுக்கும், பிரேமலதாவுக்கும்  சீனுராமசாமி கூறியதாகவும் அவர்கள் இருவருக்குமே கதை பிடித்து விட்டதால் இந்த படத்தில் சண்முகபாண்டியன் நடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க முன்வந்த உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது 

வழக்கம்போல் சீனுராமசாமி பாணியில் கிராமத்தில் நடக்கும் கதை என்றும் வீரமான இளைஞன் ஒருவன் கிராமத்தில் நடக்கும் முக்கிய தவறு ஒன்றை திருத்தி அந்த கிராமத்து மக்களை நல்வழிப் படுத்துவது தான் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web