மும்பைக்காரராக மாறும் விஜய்சேதுபதி: டுவிட்டரில் அறிவிப்பு

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் மட்டும் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பதும், தெலுங்கிலும் அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஏற்கனவே அமீர்கானுடன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

vijay sethupathi

தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல்படமான ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் தான் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் எனவும் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸே ஒரு ஹீரோவாகவும், விஜய்சேதுபதி மற்றொரு ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் டைட்டில் ’மும்பைகார்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வசிப்பவர்களை ’மும்பைகார்’ என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி மும்பைக்காரராக நடிக்கவுள்ளார்

விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் படம் குறித்த தகவலால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இவ்வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன


 

From around the web