வெளியாகியது விஜய்சேதுபதியின் தெலுங்கு பட ட்ரெய்லர்....!

தெலுங்கு ரசிகர்களை மிரள வைக்கக் காத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி...!
 
வெளியாகியது நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் தெலுங்கு திரைப்படமான" உப்பென" திரைப்படத்தின் ட்ரெய்லர்....,

தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்து மக்களிடையே "மக்கள் செல்வன் "என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும்  இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகிய சேதுபதி, நானும் ரவுடிதான், போன்ற திரைப்படங்கள் இன்றளவும் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது .

vijaysethupathi

அதுவும் குறிப்பாக இவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா, மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில்  நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு சினிமாவிலும் வில்லனாக நடித்துள்ளார் .

அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான உப்பென திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம்    இந்த மாதம் 12ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

From around the web