விஜய்சேதுபதி கதை வசனத்தில் உருவாகும் படம்: டாக்டராக நடிக்கும் பிரபல நடிகை!

 

விஜய் சேதுபதி கதை திரைக்கதை வசனம் எழுதும் ஒரு படத்தில் பிரபல நடிகை ஒருவர் டாக்டராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இயக்குனர் சரவண சக்தி என்பவர் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக தன்யா ஹோப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே அருண் விஜய்யின் தடம் மற்றும் ஹரீஸ் கல்யாணின் தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது 

tanya hope

இந்த படத்தில் நடிகை தன்யா ஹோப் மருத்துவ கல்லூரி மாணவியாகவும் டாக்டராகவும் நடிப்பதாகவும் இது ஒரு திகில் கதையம்சம் கொண்ட படம் என்றும் தனது கேரக்டர் இதுவரை தமிழ் சினிமாவில் கூறாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தன்யா ஹோப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 

மேலும் இந்த கதையை தான் மிகவும் விரும்புவதாகவும் விஜய்சேதுபதியின் கதை திரைக்கதையை கேட்டதும்தான் அசந்து போய் விட்டதாகவும் இந்த படம் தனக்கு தமிழ் திரையுலகில் ஒரு நல்ல திருப்பத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வரும் மே அல்லது ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web