வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு மாறி மாறி உதவி செய்த விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்!

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்று செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்று செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வடிவேல் பாலாஜி குடும்பத்தினர் அவருடைய சிகிச்சைக்காக சுமார் 20 லட்சம் வரை செலவு செய்து பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன இதனை அடுத்து திரையுலகினர் போட்டி போட்டுக்கொண்டு வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்புச் செலவை முழுவதுமாக தான் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை வடிவேல் பாலாஜி வீட்டிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியவர் நடிகர் விஜய் சேதுபதியும் அவரது குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிதி உதவியாக கொடுத்துள்ளார் 

மேலும் சில நட்சத்திரங்களும் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வடிவேல் பாலாஜி குடும்பத்தினரை எந்த வகையிலும் நாங்கள் கைவிட மாட்டோம் என்றும் அவர் இருந்தால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு செழிப்பாக இருக்குமோ அதே போல் அவர்களது குடும்பத்தை காப்பாற்றுவோம் என்றும் பல சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web