முரளிதரன் முத்தையா படத்தால் திரையுலகிலேயே கிளம்பும் எதிர்ப்பு: விஜய் சேதுபதி அதிர்ச்சி 
 

 

இலங்கை முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அது மட்டுமின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்னால் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்து விட்டதை அடுத்து இந்தப் படம் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள், விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாமென கோரிக்கை வைத்து வருகின்றனர் 

முரளிதரன் சிங்கள ஆதரவாளர் என்றும் அவர் தமிழர் என்பதை என்றுமே உணர்ந்தது இல்லை என்றும் எனவே அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 

இந்த நிலையில் தற்போது ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதிக்கு நெருக்கமான தமிழ் திரையுலகினர்களே அவரிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இயக்குனர் சீனு ராமசாமி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்

விஜய்சேதுபதி நடிக்கும்
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.

மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?

சீனுராமசாமியின் டுவிட்டை அடுத்து விஜய்சேதுபதியின் எண்ணம் மாறும? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web