இவர்களிடம் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: : விஜய்சேதுபதி

காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்து பலர் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய்சேதுபதியும் இதுகுறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ஆசிபாவுக்கு நடந்த கொடுமையை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக உள்ளது. இந்த குற்றத்தை படித்தவர்கள் செய்துள்ளார் என்று கேள்விப்படும்போது ஆத்திரமாக வருகிறது. அதைவிட குற்றாவாளிக்கு சப்போர்ட் செய்வதை நினைக்கும் போது கோபம் வருகிறது. பெண்களை மதிக்க கற்று தருவது போல் இனிமேல் பெண் குழந்தைகளையும் மதிக்க கற்று கொடுக்க வேண்டும் போல்
 

காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்து பலர் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய்சேதுபதியும் இதுகுறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

ஆசிபாவுக்கு நடந்த கொடுமையை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக உள்ளது. இந்த குற்றத்தை படித்தவர்கள் செய்துள்ளார் என்று கேள்விப்படும்போது ஆத்திரமாக வருகிறது. அதைவிட குற்றாவாளிக்கு சப்போர்ட் செய்வதை நினைக்கும் போது கோபம் வருகிறது.

பெண்களை மதிக்க கற்று தருவது போல் இனிமேல் பெண் குழந்தைகளையும் மதிக்க கற்று கொடுக்க வேண்டும் போல் தெரிகிறது. ஆனால்

நம் எல்லோருடைய வீட்டிலும் அம்மாம், சகோதரி, மனைவி, தோழிகள் ஆகிய பெண்கள் இருக்கின்றார்கள். இதற்கு மேல் பெண்களை மதிக்க எப்படி பாடம் எடுப்பது என்று தெரியவில்லை

நமக்கு தேவையான அடிப்படை தேவைகள் எதையும் அரசியல்வாதிகள்ல் நமக்கு செய்து தர மாட்டார்கள். ஆனால் நாம் என்ன ஜாதி, என்ன மதம் போன்ற பாடங்களை மட்டும் கேட்டு கொண்டு நம்மை பிரித்தே வைத்திருப்பார்கள். இவர்களிடம் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

இதுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது பத்தாது. ஆனாலும் தண்டனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

From around the web