விஜய் தொடர்ந்து கமலிற்கு வில்லனாக நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

விஜய் தொடர்ந்து கமலிற்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் ஒன்று பரவி வருகின்றது.
 

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பேட்டியளித்துள்ளனர், அப்போது விஜய் சேதுபதி கமலின் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா என்பது போல் தான் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு விஜய் சேதுபதி அந்த கேள்வியை தட்டி கழிப்பது போல் நடந்துள்ளார், இதை வைத்து பார்க்கோம் போது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளது என்பது போல் தான் தெரிகிறது.

From around the web