‘வாலு’ இயக்குனருடன் இணைந்த விஜய்சேதுபதி

சிம்பு நடித்த வாலு மற்றும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்கள் முதல் சமீபத்தில் விஜய் நடித்த பைரவா படம் வரை தயாரித்த நீண்ட அனுபவம் உள்ள நிறுவனம் ஆகும் இந்த படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிட இருப்பதாகவும்,
 

‘வாலு’ இயக்குனருடன் இணைந்த விஜய்சேதுபதி

சிம்பு நடித்த வாலு மற்றும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்கள் முதல் சமீபத்தில் விஜய் நடித்த பைரவா படம் வரை தயாரித்த நீண்ட அனுபவம் உள்ள நிறுவனம் ஆகும்

இந்த படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிட இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது ‘96’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே அவர் நடித்த ‘ஜூங்கா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web