10 மொழிகளில் 150 நாடுகளில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் விரைவில் ஜி ஸ்டுடியோஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று வெளியான செய்தியை தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது இந்த படம் ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளதாக. அதுமட்டுமின்றி 10 சர்வதேச மொழிகளில் சப்டைட்டிலுடன் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 150 நாடுகளில் தெரியும் வகையில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 இயக்குனர் விருமாண்டி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் புரட்சியாளராக நடித்து உள்ளார் என்றும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த படம் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவருக்கும் தேசிய விருதை வாங்கிக் கொடுக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், க/பெ ரணசிங்கம், ஓடிடி ரிலீஸ்,

From around the web