பாஜகவில் இணைந்த விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்: இன்னும் யார் யார்?

 

ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பதும் இன்னும் ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தேர்தலுக்கு முன் பல திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணையும் செய்திகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். இன்று அவர் பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து வரவேற்றனர் 

சமீபத்தில் முதல்வர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேஜேஆர் ராஜேஷ் சந்தித்தார் என்பதும் தற்போது நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

பாஜகவில் பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் இணைந்ததையடுத்து இன்னும் யாரெல்லாம் கட்சியில் இணைய காத்திருக்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது


 

From around the web