விஜய்சேதுபதியுன் உண்டு, பகத் பாசிலும் உண்டு: கமலின் ‘விக்ரம்’ படத்தில் திடீர் திருப்பம்!

 
vikram

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்பதாலும் விஜய் சேதுபதியின் கேரக்டர் கமல்ஹாசன் கேரக்டரை டாமினேட் செய்யும் என்பதாலும் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது 

sethupathi

இதனை அடுத்து இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் பகத்பாசில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘விக்ரம்’ திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் பகத் பாசில் வில்லன் கேரக்டரிலும் விஜய் சேதுபதி கமல்ஹாசனின் நண்பர் கேரக்டரிலும் நடிக்க இருப்பதாக தெரிகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web