இந்துமதக் கடவுளை அவமதித்த விஜய் சேதுபதி… வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவின் உச்சகட்ட வளர்ச்சியினை அடைந்துள்ளார். முன்னணி வீரர்கள் வருடத்திற்கு ஒரு படம் நடித்தால், விஜய் சேதுபது 5 முதல் 6 படங்கள் என நடித்து அதே அளவு சம்பளத்தினைப் பெற்று விடுகிறார். ஒவ்வொரு நடிகரும் பல ஆண்டுகள் ஆகியும் 25 படங்களை எட்டப் போராடும் நிலையில் மிகக்
 
இந்துமதக் கடவுளை அவமதித்த விஜய் சேதுபதி… வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவின் உச்சகட்ட வளர்ச்சியினை அடைந்துள்ளார்.

முன்னணி வீரர்கள் வருடத்திற்கு ஒரு படம் நடித்தால், விஜய் சேதுபது 5 முதல் 6 படங்கள் என நடித்து அதே அளவு சம்பளத்தினைப் பெற்று விடுகிறார். ஒவ்வொரு நடிகரும் பல ஆண்டுகள் ஆகியும் 25 படங்களை எட்டப் போராடும் நிலையில் மிகக் குறுகிய காலத்தில் அதிகப் படங்களை நடித்தவர் என்னும் பெயருக்குச் சொந்தக்காரரான விஜய் சேதுபதி மாறுபட்ட வேடங்களில் நடித்ததன்மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றார்.

இந்துமதக் கடவுளை அவமதித்த விஜய் சேதுபதி… வலுக்கும் கண்டனங்கள்!!

அதுமட்டுமல்லாது மேடைகளில் இயல்பாகப் பேசும் இவருக்கு தனிப்பட்ட ரீதியில் ரசிகர்களும் உண்டு, ஆனால் சில காலமாக இவரது பேச்சு சர்ச்சையில் சிக்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற இவர்  கோவில் அபிஷேகம் செய்துகொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் அவரது தாத்தாவிடம், “எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். துணி மாற்றும்போது காட்ட மாட்டேன் என்கிறார்கள்?’’ என்று கேட்க, அதற்கு தாத்தா சரியான பதிலைக் கூறவில்லை என்று கூறியதோடு
கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’ என்று விஜய் சேதுபதி கூறினார்.


இவரது பேச்சு இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதுபோல் உள்ளதாக இந்து சமூகம் சார்பில் தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றது.

From around the web