வெற்றிமாறனின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி: ஆச்சரியத்தில் திரையுலகம்

 

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தார். ஆனால் உடல்நலம் மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது 

vetrimaran

இந்த நிலையில் பாரதிராஜா நடிக்க இருந்த கேரக்டரில் கிஷோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அந்த கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றங்கள், வில்லன் உள்பட அனைத்துவித கேரக்டரிலும் நடித்து வருகிறார் என்பதும் அந்த வகையில் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய புகழைத் கொடுக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

From around the web