லோகேஷ் கனகராஜ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி!

 

’மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’கைதி’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தற்போது தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்கியிருப்பவர் லோகேஷ் கனகராஜ் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ‘மாநகரம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின

lokesh

இந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘மாநகரம்’ படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த படத்தில் உள்ள இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக விக்ராந்த் மாஸே என்ற பாலிவுட் நடிகரும் இன்னொரு ஹீரோவாக விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதி அனேகமாக சந்தீப்கிஷான் வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. குறிப்பாக பாலிவுட்டில் விஜய் சேதுபதி அறிமுகமாகிறார் என்பதும் அவரது நடிப்பு இந்த படத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web