பிரபுதேவாவுக்கு ஜோடியான விஜய்சேதுபதி நாயகி: இயக்குனர் யார் தெரியுமா?

 

பிரபுதேவா ஏற்கனவே தமிழில் மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிரபுதேவா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை ராகவன் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மஞ்சப்பை உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

prabhu deva ramya

ராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனும் நடிக்க உள்ளனர். ரம்யா நம்பீசன் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த பீட்சா, சேதுபதி உட்பட ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தொடர்ச்சியாக ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் வரும் மே அல்லது ஜூன் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

From around the web