ஒரே நேரத்தில் ஓடிடி மற்றும் டிடிஎச்-இல் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்: தேதியும் அறிவிப்பு

 

விஜய் சேதுபதி நடித்த படம் ஒன்று ஒரே நாளில் ஓடிடி மற்றும் டிடிஎச் ஆகிய இரண்டிலும் ஒளிபரப்ப இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் க/பெரணசிங்கம் விருமாண்டி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை பெற போட்டி போட்டன

இதில் ஜீ டிவி இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த படம் அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் ஓடிடி மற்றும் டிடிஎச்-இல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்த படம் ஓடிடியில் மாபெரும் வெற்றி பெறும் முதல் தமிழ் படமாக இருக்கும் என்று கட்டப்படுகிறது 

From around the web