சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்.... விஜய் சேதுபதி!

தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் அதுவே தன் நிலைப்பாடு என்றும் பேட்டியளித்தார்.
 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில், மக்கள் ஓட்டுச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து, தங்கள் ஜனநாயக கடமையை  முடித்து வருகின்றனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, நமது கோலிவுட் பிரபலங்கள் பலர் இன்று காலையில் இருந்தே வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

கோலிவுட் டின் முன்னணி நடிகர்களான அஜித், ஷாலினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், அக் ஷரா ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய் என கோலிவுட் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் அதுவே தன் நிலைப்பாடு என்றும் பேட்டியளித்தார்.

From around the web