மூளைச்சாவு ஏற்பட்ட லாபம் இயக்குநர்... தாமதமாக பார்க்க சென்ற விஜய் சேதுபதி!!!

மூளைச்சாவு ஏற்பட்ட லாபம் இயக்குநரை பார்க்க விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக பார்த்துள்ளார் என்று தெரிகிறது.
 
மூளைச்சாவு ஏற்பட்ட லாபம் இயக்குநர்... தாமதமாக பார்க்க சென்ற விஜய் சேதுபதி!!!

பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் எனும் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்துக்கான எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன், நேற்றைய தினம் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் எடிட்டிங் பணிக்கு திரும்பவில்லை.

அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அவர் சுயநினைவின்றி அங்கு மயங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்ட உதவியாளர்கள் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்புதான் அவருக்கு மூளைச்சாவு நேர்ந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றிரவு விஜய் சேதுபதி,  அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக ஜனநாதனை பார்த்துள்ளார் என்று தெரிகிறது. இந்நிலையில் நரம்பியல் மருத்துவர்கள் ஜனநாதனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

From around the web