முதல்முறையாக இணையும் விஜய்சேதுபதி-அமலாபால்

கொரோனா வைரஸ் காலத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தான் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு ஆந்தாலஜி திரைப்படம் உருவாக இருப்பதாகவும் ஓடிடி பிளாட்பாரத்திற்காக உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தை 4 முன்னணி இயக்குனர்கள் இயக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

கௌதம் மேனன், வெங்கட்பிரபு, ஏ.எல். விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகிய நால்வர் இயக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் நலன் குமாரசாமி இயக்கும் பகுதியில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் 15 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது

அதேபோல் கௌதம் மேனன் இயக்கும் பகுதியில் அமலா பால் நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் இதுவரை ஒரே படத்தில் நடித்தது இல்லை. இந்த திரைப்படத்திலும் அவர்கள் இருவரும் இணையும் காட்சி இல்லை என்றாலும் இருவரும் ஒரே படத்தில் முதல் முதலாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் வெங்கட் பிரபு மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கும் பகுதியின் படப்பிடிப்பு தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ’குட்டி லவ் ஸ்டோரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web