கர்ணன் படம் பற்றி விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்.... அட இப்படியா சொன்னார்?

இந்த படம் பற்றிய நல்ல மதிப்பீட்டு விமர்சனங்கள், பாராட்டுக்கள் முதலானவை அதிக அளவில் ரசிகர்களால் மட்டுமல்லாது திரை பிரபலங்களாலும் பகிரப்பட்டு வருகின்றன. 
 
கர்ணன் படம் பற்றி விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்.... அட இப்படியா சொன்னார்?

அசுரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புகளும் விமர்சனங்களும் பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் கர்ணன் திரைப்படம் நேரடியாக நேற்றையதினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தனுஷ், ரெஜிஷா விஜயன் ,யோகி பாபு, லால், நட்டி நட்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் பற்றிய நல்ல மதிப்பீட்டு விமர்சனங்கள், பாராட்டுக்கள் முதலானவை அதிக அளவில் ரசிகர்களால் மட்டுமல்லாது திரை பிரபலங்களாலும் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி,  “கர்ணன் திரைப்படம் எக்சல்லெண்ட் திரைப்படம் என்றும் இதை காணத்தவறாதீர்கள் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், வாழ்வளிக்க வந்தவன் கர்ணன்... கர்ஜிக்கும் வெற்றி என்று ஒரு குட்டி கர்ணன் பட புரோமோவையும் தன் ட்வீட்டுடன் சேர்த்து பகிர்ந்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை அண்மையில் பெற்றுள்ளார் என்பதும், இதேபோல் அசுரன் படத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் பெற்றுள்ளார் என்பதும், தனுஷூம் விஜய் சேதுபதியும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

From around the web