கேரள மக்களுக்காக நேரடியாக களமிறங்கிய தளபதி விஜய்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக இதுவரை நிதியுதவி செய்தவர்கள் கேரள முதல்வரிடம் நேரிடையாகவோ, அல்லது வங்கி மூலமோ நிதியுதவி செய்துள்ளனர். இந்த பணம் அரசு அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் போய்ச்சேர குறைந்தபட்சம் ஒருசில வாரங்களாவது ஆகும். மேலும் இதில் இடையில் என்னென்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நடிகர் விஜய் வித்தியாசமாக கேரள மக்களுக்கு உதவ தானே களத்தில் இறங்கியுள்ளார். விஜய் இதற்காக ரூ.70 லட்சம் செலவு செய்ததாக தெரிகிறது. கேரள ரசிகர் மன்ற
 

கேரள மக்களுக்காக நேரடியாக களமிறங்கிய தளபதி விஜய்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக இதுவரை நிதியுதவி செய்தவர்கள் கேரள முதல்வரிடம் நேரிடையாகவோ, அல்லது வங்கி மூலமோ நிதியுதவி செய்துள்ளனர். இந்த பணம் அரசு அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் போய்ச்சேர குறைந்தபட்சம் ஒருசில வாரங்களாவது ஆகும். மேலும் இதில் இடையில் என்னென்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் நடிகர் விஜய் வித்தியாசமாக கேரள மக்களுக்கு உதவ தானே களத்தில் இறங்கியுள்ளார். விஜய் இதற்காக ரூ.70 லட்சம் செலவு செய்ததாக தெரிகிறது. கேரள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கி கணக்குகளை பெற்று இந்த ரூ.70 லட்சத்தை பிரித்து ஒவ்வொரு ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3 லட்ச ரூபாய் அனுப்பி உடனடியாக இந்த பணம் அந்தந்த பகுதி பொதுமக்களிடம் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

கேரள மக்களுக்காக நேரடியாக களமிறங்கிய தளபதி விஜய்

இந்த பணம் கிடைத்தவுடனே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கி அந்தந்த பகுதி மக்களிடம் சென்று நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். எனவே விஜய் கொடுத்த ரூ.70 லட்சம் நிதியுதவி அடுத்த சிலமணி நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்துள்ளது. விஜய்யின் இந்த வித்தியாசமான முயற்சியை மற்ற நடிகர்களும் பின்பற்றலாமே என கேரள மக்கள் கூறி வருகின்றனர்

From around the web