பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி வரும் விஜய் தேவர்கொண்டா!!

கொரோனா நோய்த் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாரன்ஸ், அக்ஷய் குமார், சல்மான் கான், சோனு சூட், அஜித், விஜய், சிவ கார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, சூரி எனப் பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். அந்தவகையில் இளைஞர்கள்
 
பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி வரும் விஜய் தேவர்கொண்டா!!

கொரோனா நோய்த் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் லாரன்ஸ், அக்ஷய் குமார், சல்மான் கான், சோனு சூட், அஜித், விஜய், சிவ கார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, சூரி எனப் பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர்.

அந்தவகையில் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் கனவுக் கண்ணனாக விளங்கும் விஜய் தேவர்கொண்டா சுமார் 17,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி வரும் விஜய் தேவர்கொண்டா!!

அதாவது இவர் தன்னுடைய சொந்த செலவில் ஏழை, எளிய மக்களுக்கு சமையலுக்குத் தேவையான பொருட்களை வழங்க எண்ணி தன்னார்வ அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து 17,723 குடும்பங்களுக்கு அரிசி, சமையல் பொருட்கள் மற்றும் காய் கறிகள் வழங்கியுள்ளார். இதற்கு ரூ.1.7 கோடி செலவாகியுள்ளது.

மேலும் அத்துடன் நிற்காமல், அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து இன்னிம் உதவிகள் செய்ய நிதியுதவி திரட்டியுள்ளார், கிடைத்த ரூ.1.5 கோடி ரூபாய் நிதியில் மேலும் 58,808 குடும்பங்களுக்கு
அரிசி, சமையல் பொருட்கள் மற்றும் காய் கறிகள் வழங்கியுள்ளார்.

From around the web