ஓணம் பண்டிகை கொண்டாட தனி விமானத்தில் கேரளா சென்ற நயன்தாரா: வைரலாகும் புகைப்படம்

கேரள மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி கேரளாவின் அண்டை மாநிலங்களில் உள்ள எல்லைகளில் உள்ள மக்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தங்களுடைய வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் கேரளாவை பிறப்பிடமாக கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது சொந்த ஊரில்
 

ஓணம் பண்டிகை கொண்டாட தனி விமானத்தில் கேரளா சென்ற நயன்தாரா: வைரலாகும் புகைப்படம்

கேரள மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி கேரளாவின் அண்டை மாநிலங்களில் உள்ள எல்லைகளில் உள்ள மக்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தங்களுடைய வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் கேரளாவை பிறப்பிடமாக கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது சொந்த ஊரில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. விமானத்திலிருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இறங்கி நடந்து வருவது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டதால் விரைவில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்து விட்டு சென்னை திரும்பியவுடன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாக உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அண்ணாத்த உள்பட 3 படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web