அடேங்கப்பா... 20 கிலோ எடை குறைத்து செம மாஸ் கெட்டப்பில் நடிகை

முதலில் இருக்கும் புகைப்படம் என்னை ஆரரோக்கியமற்றவளாக காட்டியது. எனக்கு அந்த நாள் நன்றாக நியாபகம் இருக்கிறது. 
 

2012ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்தவர் வித்யூ ராமன். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் வீரம், காக்கிசட்டை, ஜில்லா, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற பல படங்களில் நடித்தார். 

சில வருடங்களாக அவரை தமிழில் பார்க்க முடியவில்லை. கடந்த வருடம் உடல் எடையைக் குறைத்து பிட்டாக மாறிவரும் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் கடுமையான பயிற்சியினால் உடல் எடையை 86.5 கிலோவில் இருந்து இந்த ஆண்டு 65.3 கிலோவிற்கு குறைத்து விட்டார்.

இந்நிலையில் இது பற்றி அவர் ஒரு பதிவில் "20 கிலோ குறைவாக இருக்கிறேன். இது கண்ணீரும், வேர்வையும் நிறைந்த சற்று நீளமான பயணம். முதலில் இருக்கும் புகைப்படம் என்னை ஆரரோக்கியமற்றவளாக காட்டியது. எனக்கு அந்த நாள் நன்றாக நியாபகம் இருக்கிறது. 

ஒரு தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு செல்லும்போது என்னால் எந்த உடையையும் அணிய இயலவில்லை. மன அழுத்தமும் கோபமும் உண்டாகியது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நான் ஆரோக்கியமானவளாகவும், ஃபிட்டாக மாறவும் முடிவு செய்தேன். உங்களுக்காக நீங்கள் செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.

From around the web