வெற்றிமாறன் - சூரி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

 
வெற்றிமாறன் - சூரி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் காட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது வேலூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது 

viduthalai

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டைட்டில் ’விடுதலை’ என்று படக்குழுவினர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் நடித்த விடுதலை என்ற திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் தற்போது அதே டைட்டிலில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

viduthalai

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றில் சூரியும், மற்றொன்றில் விஜய் சேதுபதியும் உள்ளனர் என்பதும் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போஸ்டர்களின் மூலம் சூரி போலீஸ் கேரக்டரிலும், விஜய் சேதுபதி கைதி கேரக்டரிலும் நடித்துள்ளார் என தெரிகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் எல்ரெட்குமார் என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web