’மாநாடு’ நாயகியால் வெங்கட்பிரபு-பிரேம்ஜி மோதலா?

 

சிம்பு நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக சிம்பு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை காலை 09.09 மணிக்கு வெளியாகும் என வெங்கட்பிரபு சற்று முன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் 

kalyani

மேலும் இந்த ட்விட்டில் அவர் படக்குழுவினர்களை டுவிட்டர் ஐடியை அவர் பதிவு செய்துள்ளார் ஆனால் அந்த ஐடிகளில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெயரை விட்டுவிட்டார். இதனால் கடும் கோபமடைந்த நடிகரும் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி ’எப்படி நீ நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெயரை விடலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே செல்ல சண்டை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

நாயகி கல்யாணியின் பெயரை மறந்து விட்டாரா? அல்லது வேண்டுமென்றே விட்டு விட்டாரா என்பது வெங்கட்பிரபுவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web