மனுஷன் இவ்ளோ சிம்பிளா... இது தெரியாம போச்சே!!!

மைதானத்திலேயே மக்களோடு மக்களாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மிகவும் கலைப்பில் சிம்பு படுத்து உறங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் வெளியானதுமே ரசிகர்கள் குஷி ஆகி விட்டனர்.

சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து இருந்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் சமயத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு திரைப்படம் வெளியானதை அடுத்து உற்சாகமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியானது அவருடைய ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகத்தை ஊட்டியது. இந்த நிலையில் சிம்பு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து வருவதாக வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மாநாடு திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் இரவு நேரத்தில் ஷூட் நடக்கும் அந்த மைதானத்திலேயே மக்களோடு மக்களாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மிகவும் கலைப்பில் சிம்பு படுத்து உறங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்பிளான மனிதர் என  இயக்குனர் ட்வீட் செய்திருக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் சிம்பு தரையில் படுத்து இருக்கும்போது எஸ்.ஜே.சூர்யா நின்றபடியே அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு சிம்புவும் சிரித்துக் கொண்டே பதில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

From around the web