சிம்புவுக்கு ஜோடி ஆகிறாரா ஸ்ரீதேவி மகள்?

நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டிலை போன்றே படமும் அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த செய்தியை இயக்குனர் வெங்கட்பிரபு மறுத்துள்ளார். இது குறித்து வெங்கட் பிரபு கூறும்போது, ‘நான் தற்போது ‘பார்ட்டி’ படத்தின்
 
simbu jhanvi

சிம்புவுக்கு ஜோடி ஆகிறாரா ஸ்ரீதேவி மகள்?

நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டிலை போன்றே படமும் அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த செய்தியை இயக்குனர் வெங்கட்பிரபு மறுத்துள்ளார். இது குறித்து வெங்கட் பிரபு கூறும்போது, ‘நான் தற்போது ‘பார்ட்டி’ படத்தின் பின்னணி வேலைகளில் பிசியாக இருக்கிறேன். சிம்பு படத்தின் ஸ்கிரிப்ட்டை இன்னும் முடிக்க வில்லை. விரைவில் யார் நடிகை என்றும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலையும் வெளியிடுவேன். அதுவரைக்கும் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவிருப்பதாக வதந்தி ஒன்று பரவி பின்னர் அது ஓய்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web