வெல்வெட் நகரத்திற்கு செல்லும் நடிகை வரலட்சுமி

இன்றைய நிலையில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி என்று தான் சொல்ல வேண்டும். மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார். தாரை தப்பட்டை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் வரலட்சுமியின் அபாரமான நடிப்பால் அவர் இன்று கோலிவுட்டின் பிசியான நடிகையாக உள்ளார் இந்த நிலையில் அவர்
 

இன்றைய நிலையில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி என்று தான் சொல்ல வேண்டும். மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.

தாரை தப்பட்டை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் வரலட்சுமியின் அபாரமான நடிப்பால் அவர் இன்று கோலிவுட்டின் பிசியான நடிகையாக உள்ளார்

இந்த நிலையில் அவர் ந்டிக்கும் திரைப்படம் ஒன்றுக்கு ‘வெல்வெட் நகரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கும் இந்த படத்திற்கு அச்சு என்பவர் இசையமைக்கின்றார்.

கொடைக்கானல் அருகே நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் கற்பனை கலந்த ஒரு த்ரில் படம் தான் ‘வெல்வெட் நகரம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஒரு பாடலின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் இயக்குனர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

From around the web