காலணியை கையில் எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை மக்கள் கட்சித்தலைவர் வேல்முருகன் , சென்ற வருடம் காவேரி பிரச்சினையில் உளுந்தூர்பேட்டையில் டோல்கேட்டை அடித்து நொறுக்கினார். இந்த வழக்கிலே அவர் நீண்ட நாள் கழித்துதான் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அது சம்பந்தப்பட்ட வழக்குகளே தீராத நிலையில் இப்போது புதியதாக அது போல சுங்கச்சாவடி பிரச்சினையில் சிக்கி கொண்டுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது காரில் மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற போது, அங்கு
 

தமிழக வாழ்வுரிமை மக்கள் கட்சித்தலைவர் வேல்முருகன் , சென்ற வருடம் காவேரி பிரச்சினையில் உளுந்தூர்பேட்டையில் டோல்கேட்டை அடித்து நொறுக்கினார். இந்த வழக்கிலே அவர் நீண்ட நாள் கழித்துதான் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அது சம்பந்தப்பட்ட வழக்குகளே தீராத நிலையில் இப்போது புதியதாக அது போல சுங்கச்சாவடி பிரச்சினையில் சிக்கி கொண்டுள்ளார்.

காலணியை கையில் எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது காரில் மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற போது, அங்கு பணியில் இருந்த வடநாட்டு ஊழியர்கள் அவரது காரை நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர்.அதற்கு, இந்தியா முழுவதும் செல்வதற்கு அனுமதி பெற்ற அட்டையை ஓட்டுநர் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.

அதை படிக்கத் தெரியாத அவர்கள் வேல்முருகனின் கார் ஓட்டுனரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேல்முருகனின் கார் ஓட்டுநர் முதலில் சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வேல்முருகனின் ஓட்டுனர் தாக்கியதை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியரும் அவரை பதிலுக்கு தாக்கினார். சிறிது நேரத்தில் காருக்குள் இருந்து இறங்கிய வேல்முருகன், சுங்கச்சாவடி ஊழியரை விரட்டியவாறே தனது காலணியை கழற்றி கையில் எடுத்து  அவர் மீது வீசும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

From around the web