திட்டமிடப்பட்டபடி நாளை திரைக்கு வாரார் கர்ணன்! கர்ணன் வெல்வான்! தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை

தனுஷின் கர்ணன் படமானது திட்டமிட்டபடி நாளை திரையரங்கில் வெளியாகும் என்று கூறும் தயாரிப்பாளர்!
 

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் தனது விடா முயற்சியாலும் இன்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி  திரைப்படம் மக்கள் மத்தியில் குறிப்பாக பொறியியல் மாணவர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் பிரபல காமெடியன் விவேக் நடித்திருந்தார்.மேலும் இத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

karnan

மேலும் இவர் படிக்காதவன், பொல்லாதவன், ஆடுகளம் போன்ற பல வெற்றிப் படங்களை  ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. சில தினங்களுக்கு முன்பாக வெளியான இவரது அசுரன் என்ற திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இந்நிலையில் தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.

திரைப்படம் நாளை வெளியாகும்  என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீடு உறுதியானது. மேலும் தமிழக அரசானது நண்பகலில் சில  ஊரடங்கு  கூறியுள்ளது. கர்ணன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தற்போது திரைப்படத்தின் வெளியீடு பற்றி கூறியுள்ளார் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று கூறினார். மேலும் 50% இருக்கைகளுடன் திரையரங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு திரைப்படத்தை வெளியிட்டு பற்றி கூறி ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்துள்ளார். மேலும் அரசின் விதிகளுக்குட்பட்டு கர்ணன் வெல்வான் எனவும் தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

From around the web