செம கெத்தாக விசிலடித்து தெரிக்கவிட்ட வரலட்சுமி!..

செம கெத்தாக விசிலடித்து தெரிக்கவிட்ட  புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி
 

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக  இடம் பிடிக்க காரணம் அர்ப்பணிப்புடன் கூடிய அவரின் நடிப்பே. படங்களில் சவலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன் திறமையை அழுத்தமாக அதில் பதிவு செய்து விடுகிறார்.

ஒரு நடிகை ஹீரோயினாக நடித்து தான் மார்கெட்டில் நிற்க முடியும் என்பதை தாண்டி மற்ற வேடங்களில் நடித்து புது பாதை அமைத்து கொடுத்துவர் வரலட்சுமி என்பதை மறுக்க முடியாது.

சர்கார் படத்தில் அரசியல் வாதியின் மகளாக நடித்ததுடன் ஆட்சி பிடிக்க அப்பாவுக்கு ஐடியா கொடுக்கும் புத்திசாலி பெண்ணாக நடித்து அசத்தினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவருக்கு தெலுங்கு சினிமா பட வாய்ப்புகளும் அமைந்து வருகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள Krack படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரத்திற்கும் அவரின் நடிப்பிற்கும் ரசிகர்களிடத்தில் இருந்து தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.


 

null


 

From around the web