வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வரலட்சுமி....

நடிகை வரலக்ஷ்மி வாத்தி கமிங் பாடலுக்கு ஸ்டப் போட்டுள்ளார்.
 

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடல் உலகளவில் பேமஸ் ஆகியுள்ளது, இந்த பாட்டிற்கு பல துறையை சேர்ந்த நட்சத்திரங்களும் நடனமாடி அசதி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல தமிழ் சினிமா நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், திருமண நிகழ்ச்சி ஒன்றில் வாத்தி கமிங் பாடலுக்கு ஸ்டப் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது, மேலும் நடிகை வரலக்ஷ்மி இதற்கு முன் தளபதி விஜய் உடன் சர்கார் என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web