கைது ஆகாமல் தப்பிய வனிதா… ஏமாற்றத்தில் மக்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. அமைதியாக இருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் எதையாவது செய்து பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறார் வனிதா. இந்நிலையில் வனிதாவின் கணவர் ஆனந்த்ராஜ் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்திருந்தார். கடந்த 4 மாதமாக தனது மகள் ஜோவிகாவை தேடி வந்ததாகவும், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவின் பாதுகாப்பில் தான் மகள் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். குழந்தையை மீட்டு என்னிடம் தரவேண்டும் என தெலுங்கானா போலீசில்
 
கைது ஆகாமல் தப்பிய வனிதா... ஏமாற்றத்தில் மக்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. அமைதியாக இருக்கும்  பிக்பாஸ் வீட்டிற்குள் எதையாவது செய்து பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறார் வனிதா.

இந்நிலையில்  வனிதாவின் கணவர் ஆனந்த்ராஜ் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்திருந்தார். கடந்த 4 மாதமாக தனது மகள் ஜோவிகாவை தேடி வந்ததாகவும், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவின் பாதுகாப்பில் தான் மகள் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். குழந்தையை மீட்டு என்னிடம் தரவேண்டும் என தெலுங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார். 

கைது ஆகாமல் தப்பிய வனிதா… ஏமாற்றத்தில் மக்கள்..!

இதனால் தமிழ்நாடு வந்த தெலுங்கானா போலீஸ், சென்னை நாசரேத்பேட்டை போலீசாரின் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். தனி அறையில் வனிதாவை அழைத்து விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

வனிதாவின் வக்கீல் ஸ்ரீதர் வனிதாவின் மகளை அழைத்து வந்தார். அப்போது ஜோவிகா அளித்த வாக்குமூலத்தில், ”நான் கடந்த பிப்ரவரி மாதம் அம்மாவிற்கு போன் செய்து என்னை அழைத்து செல்லும்படி கூறினேன். காரில் என்னை அழைத்துக் கொண்டு கோவையில் உள்ள ராகவி அத்தை வீட்டிற்கு சென்றார். அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதால் நானும் அக்காவும் ராகவி அத்தையுடன்தான் தங்கியிருக்கிறோம். 

மேலும் என் அப்பாவுடன் இருப்பது எனக்கு பாதுகாப்பாக இல்லை. எனது அப்பா வீட்டிற்கு, நண்பர்கள் பலர் அடிக்கடி வருவார்கள். அப்பொழுது எல்லாம் எனக்கு பயமாக இருக்கும். எனவே என்னை அப்பாவுடன் அனுப்ப வேண்டாம் ” எனக் கூறியுள்ளார். 

வனிதா கைதாவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு இது ஏமாற்றமாகவே இருந்த து. இனியாவது கொஞ்சம் மாறுவாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.

From around the web