இரண்டாவது முறையாக எவிக்ட் ஆனார் வனிதா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதுவும் கடந்த வாரம் சேரன் இயக்கும் குடும்பப் படம்போல் காட்சியளித்தது பிக் பாஸ் குடும்பம், ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் மிகச் சிறப்பாக என்ட்ரி கொடுத்ததுடன் அனைவருக்கும் உத்வேகம் கொடுத்து சென்றனர். எவிக்ஷனுக்கு பற்றிப் பேசினார் கமல். அடுத்தடுத்த 3 வாரங்களுக்கு 3 பேர் வெளியேற வேண்டும் அது யார் யாராக இருக்கும் என போட்டியாளர்களிடம் கேட்டார் கமல், அப்போது அனைவரும் 3 பேரை சொன்னார்கள், அதில் அதிகம்
 
இரண்டாவது முறையாக எவிக்ட் ஆனார் வனிதா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதுவும் கடந்த வாரம் சேரன் இயக்கும் குடும்பப் படம்போல் காட்சியளித்தது பிக் பாஸ் குடும்பம், ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் மிகச் சிறப்பாக என்ட்ரி கொடுத்ததுடன் அனைவருக்கும் உத்வேகம் கொடுத்து சென்றனர்.

எவிக்‌ஷனுக்கு பற்றிப் பேசினார் கமல். அடுத்தடுத்த 3 வாரங்களுக்கு 3 பேர் வெளியேற வேண்டும் அது யார் யாராக இருக்கும் என போட்டியாளர்களிடம் கேட்டார் கமல், அப்போது அனைவரும் 3 பேரை சொன்னார்கள்,   அதில் அதிகம் இடம்பெற்றது வனிதா, ஷெரின், கவின்,  சேரன் மற்றும் லாஸ்லியாவின் பெயர்கள்தான்.

இரண்டாவது முறையாக எவிக்ட் ஆனார் வனிதா!!

தர்சன், முகின், சாண்டியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, வனிதாவும் தன் பெயரை சொல்லியதோடு, இந்த வாரம் வெளியேறத் தயாராக உள்ளதாக கூறினார்.

அப்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் உள்ளே நுழையும்போது போடப்பட்ட   பாடல் ஒலிபரப்பாகும், அதன் அடிப்படையில் யார் பாடல் ஒலிபரப்பாகிறதோ அவர்கள் காப்பாற்றப்பட்டதாக கருதப்படும் என்றார். அதன்படி கவினி பிரண்டைபோல, தர்சனின் காலையில் தினமும், சாண்டியின் லாலா லாலா, ஷெரினின் துள்ளுவதோ இளமை போன்ற பாடல்கள் போடப்பட்டது, இதன்மூலம் எஞ்சியிருந்த வனிதா எவிக்ட் என்பது தெளிவாகியது.

அப்போது கார்டைக் காட்டிய கமல் ஹாசன் வனிதாவின் எவிக்ட் ஆவதாகக் கூறினார்.

From around the web