ஃபாத்திமா பாபுவை தொடர்ந்து வெளியேறிய வனிதா…!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிஸோடில் கமலஹாசன் போட்டியாளர்களை சந்திக்க வந்திருந்தார். வழக்கம் போல பொடி வைத்து பேசி உள்ளிருப்பவர்களுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்கினார். சனிக்கிழமை வனிதாவின் அணுகுமுறை சரியில்லை என்று கேள்வி கேட்டதுடன், அவருக்கு எதிராக சண்டையிட்ட தர்ஷனுக்கு ஆதரவு தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், மற்ற யாரும் வனிதாவின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை, இப்படி செய்வது தவறு. ஒருவர் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்று வனிதாவிற்கு எதிராக ஆதரவு தெரிவித்தார். பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிஸோடில் கமலஹாசன் போட்டியாளர்களை சந்திக்க வந்திருந்தார். வழக்கம் போல பொடி வைத்து பேசி உள்ளிருப்பவர்களுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்கினார். 

சனிக்கிழமை வனிதாவின் அணுகுமுறை சரியில்லை என்று கேள்வி கேட்டதுடன், அவருக்கு எதிராக சண்டையிட்ட தர்ஷனுக்கு ஆதரவு தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், மற்ற யாரும் வனிதாவின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை, இப்படி செய்வது தவறு. ஒருவர் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்று வனிதாவிற்கு எதிராக ஆதரவு தெரிவித்தார்.

ஃபாத்திமா பாபுவை தொடர்ந்து வெளியேறிய வனிதா…!

பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து மீராவில் தொடங்கி, மதுமிதா, சேரன், அபிராமி, ஃபாத்திமா பாபு, தர்ஷன் என அனைவரிடமும் சண்டையிட்டு கார்னர் செய்யும் வனிதா வீட்டை விட்டு வெளியேறுவாரா என்று ரசிகர்கள் மட்டுமன்றி சக போட்டியாளர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் எவிக்ஷன் பிராசஸ் நடந்தது. இதில் வனிதா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னதாக வனிதா சிக்ரட் ரூமில் வைக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை வெளியேற்ற பிக்பாஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


From around the web