வந்த வேலையை செய்து முடித்தார் வனிதா..!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது. வைல்டு கார்டு என்ட்ரியாக கஸ்தூரி அனுப்பப்பட்டும் எந்தப் பலனும் அளிக்கவில்லை. இதனால் தயாரிப்புக் குழு எவ்வளவு முயன்றாலும் இழந்த டி ஆர் பியை வனிதாவால் மட்டுமே மீட்டுத் தர முடியும் என்று தெரிந்துகொண்டு வனிதாவையே வீட்டுக்குள் அனுப்பினர். நேற்று காலையில் சும்மா இருந்த மதுமிதாவினைத் தூண்டிவிட்டார் வனிதா. இதனை அப்படியே உள்வாங்கிக் கொண்ட மதுமிதா, ஆண்களின்
 
வந்த வேலையை செய்து முடித்தார் வனிதா..!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது.

வைல்டு கார்டு என்ட்ரியாக கஸ்தூரி அனுப்பப்பட்டும் எந்தப் பலனும் அளிக்கவில்லை. இதனால் தயாரிப்புக் குழு எவ்வளவு முயன்றாலும் இழந்த டி ஆர் பியை வனிதாவால் மட்டுமே மீட்டுத் தர முடியும் என்று தெரிந்துகொண்டு வனிதாவையே வீட்டுக்குள் அனுப்பினர்.

வந்த வேலையை செய்து முடித்தார் வனிதா..!

நேற்று காலையில் சும்மா இருந்த மதுமிதாவினைத் தூண்டிவிட்டார் வனிதா. இதனை அப்படியே உள்வாங்கிக் கொண்ட மதுமிதா, ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதெனவும், இதனால் பெண் போட்டியாளர்கள் வந்த நோக்கத்தினையே மறந்துவிட்டனர் என்றும் கூறினார் வனிதா.

தயாரிப்புக் குழு செய்த வேலையை அறியாத மதுமிதா, வனிதா சொல்வதை ஆமோதித்ததுடன்,  அதனை அப்படியே உள் வாங்கிக் கொண்டார்.

அதனால் வீட்டில் உள்ள ஆண்கள் செய்யும் ஆணாதிக்கத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று கூற, அதனால் பெண்களின் பங்களிப்பு பெரியளவில் தெரியவில்லை என்றார். இதனால் கவினுக்கும் மதுமிதாவுக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்ன நடந்தால் என்ன? வனிதா வந்த வேலை சிறப்பாக முடிந்துவிட்டது.

From around the web